🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும் இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார்.
நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையாலும், இதனை செய்ததால் தனக்கு வந்த துன்பத்திலிருந்து மீண்டு வந்தார். ஆகவே நாமும் நமக்கு வரும் துன்பத்திலிருந்து நம்மை நாமே காப்பாற்ற முயற்சி செய்து வாழ்வில் வெற்றி பெறுவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக