முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கால முன்பே கட்டி முடித்தது.கோடைகாலம் முடிவுற்று மழை பெய்தது, குளிர்காலம் தொடங்கியது.எறும்புகள் தாங்கள் கட்டிய புற்றில் வசித்து,சேர்த்த உணவை உண்டு மகிழ்ந்தது.வெளியில் வெட்டுக்கிளி மழையில் நனைந்து, பசியால் துடித்தது. வெட்டுக்கிளி, எறும்பு புற்றின் முன் நின்று எறும்புகளிடம் உதவியைக் கேட்டது,உதவாவிடில் நான் இறக்க நேரிடும் என்று கூறியது. இதனைக் கேட்டவுடன் எறும்புகள் வெட்டுக்கிளியை புற்றினுள் அழைத்து உணவு கொடுத்து உதவி இன்புற்றது. 

  நீதி- எறும்புகள் "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் ","பருவத்தே பயிர் செய்"என்பதனைப் போன்று கோடைக்காலத்திலேயே புற்று கட்டி உணவு சேகரித்ததால்தான் குளிர்காலத்தில் வெளியில் சென்று உணவு சேகரிக்க இயலாவிடினும் சேர்த்த உணவை உண்டு மகிழ முடிந்தது. 
         எறும்புகள் "வருமுன் காப்பதே சிறந்தது" என்பது போன்று எதிர்காலத்தை பற்றி யோசித்து புற்று கட்டி உணவு சேகரித்து வரும் மழைகாலத் துன்பத்திலிருந்து முன்பே தன்னை காத்துக் கொண்டது. 
         மேலும் எறும்புகள்
 "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை." என்பதிற்கேற்ப கோடைக்காலத்தில் வெட்டுக்கிளி இகழ்ந்ததை பொறுத்துக் கொண்டு அதனை பெரிதுபடுத்தாமல் தன் உணவு சேகரித்தல் வேலையை செவ்வனே செய்தது.
 "காலத்தினால்செய்த நன்றி
சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது." என்பதைப் போன்று உரிய நேரத்தில் வெட்டுக்கிளிக்கு எறும்புகள் உதவி செய்தது.
 "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண 
நன்னயம் செய்து விடல்" என்றவாறு சிறிய எறும்பு தான் உணவு எடுத்துச்செல்ல உதவ மறுத்து இகழ்ந்த வெட்டுக்கிளிக்கும் பெருந்தன்மையாய் உணவு அளித்து உதவி செய்தது. 
        
      எனவே நாம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிப்பைத் தொடங்குவோம்,அதுவே நம்மை வரும் பேரிடரிலிருந்து நம்மைக் காக்க இயலும்.அதுமட்டுமின்றி தம்மை இகழ்ந்தவரையும் உற்ற நேரத்தில் உதவி செய்யாதவரையும் பாரபட்சமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் நம் சேமிப்பைக் கொண்டு உதவ முடியும். எப்பொழுதும் அனைத்து உயிர்களுக்கும் பெருந்தன்மையாய் உதவி மகிழ்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...